அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும் வரை தங்கினார்கள் என எண்ணுகிறேன்.
அத்தியாயம்: 25
(புகாரி: 1547)حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى العَصْرَ بِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ – قَالَ: وَأَحْسِبُهُ – بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ
Bukhari-Tamil-1547.
Bukhari-TamilMisc-1547.
Bukhari-Shamila-1547.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
பயணத்தில் சுருக்கமாக தொழலாம் என்பதின் படி நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் அஸரை 2 ரக்அத்தாக தொழுதுள்ளார்கள்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . அப்துல்வஹ்ஹாப் பின் அப்துல்மஜீத்
4 . அய்யூப் பின் கைஸான்
5 . அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் அல்ஜர்மீ
6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-1551.
புகாரி 1547 அறிவிப்பாளர் தொடர் வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அறிவிப்பாளர்கள் பெயர் தமிழில் சேர்க்கப்பட்டுள்ளது.