தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1618

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.

பெண்கள் ஆண்களோடு வலம்வருவதை இப்னு ஹிஷாம் தடுத்தது பற்றி நான் அதாவிடம் கூறியபோது, ‘அவர் எப்படித் தடுக்கலாம்? நபி(ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆண்களோடு வலம்வந்துள்ளனரே!’ என அதா கூறினார். அதற்கு நான் ‘இ(வ்வாறு செய்த)து ஹிஜாபின் சட்டம் அருளப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா?’ எனக் கேட்க, அவர் ‘ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி) மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இந்நிகழ்ச்சியை கண்டேன்!’ என்றார்.

மீண்டும் நான் ‘அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்து விடுவார்களோ?’ என்று கேட்டேன். அதற்கு, ‘கலந்து விட மாட்டார்கள்; ஆயிஷா(ரலி) ஆண்களோடு கலக்காமல் ஓரமாக வலம்வருவார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கையாளர்களின் தாயே! நடங்கள்! நாம் சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்!’ என்றார். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நீ போ(ய் முத்தமிடு)!’ என்றார்கள். அப்பெண் செல்ல மறுத்துவிட்டார்.

இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொண்டு சென்று ஆண்களோடு வலம்வருவார்கள், ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேறும் வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் இப்னு உமைரும் ஆயிஷா(ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கியிருந்தார்’ என்று அதா கூறினார்.

நான் அதாவிடம் ‘அவர்களின் ஹிஜாப் (தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளும் முறை) எப்படி இருந்தது?’ எனக் கேட்டேன். ‘ஆயிஷா(ரலி), துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை தொங்கவிடப்பட்டிருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் அதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும், ஆயிஷா(ரலி) ரோஜாப்பூ நிறமுள்ள ஆடை அணிந்திருந்ததை பார்த்தேன்’ எனக் கூறினார்.
Book :25

(புகாரி: 1618)

بَابُ طَوَافِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ

وقَالَ لِي عَمْرُو بْنُ عَلِيٍّ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ

إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ، قَالَ: كَيْفَ يَمْنَعُهُنَّ؟ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الرِّجَالِ؟ قُلْتُ: أَبَعْدَ الحِجَابِ أَوْ قَبْلُ؟ قَالَ: إِي لَعَمْرِي، لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الحِجَابِ، قُلْتُ: كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ؟ قَالَ: لَمْ يَكُنَّ يُخَالِطْنَ، كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَالِ، لاَ تُخَالِطُهُمْ، فَقَالَتْ امْرَأَةٌ: انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ المُؤْمِنِينَ، قَالَتْ: «انْطَلِقِي عَنْكِ»، وَأَبَتْ، يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ، فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ، وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ البَيْتَ، قُمْنَ حَتَّى يَدْخُلْنَ، وَأُخْرِجَ الرِّجَالُ، وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ، قُلْتُ: وَمَا حِجَابُهَا؟ قَالَ: هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ، لَهَا غِشَاءٌ، وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ، وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.