தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1663

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

அப்துல் மலிக் இப்னு மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமரைப் பின்பற்றுமாறு ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று ‘எங்கே அவர்?’ என்று சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் வெளிவந்தார். இப்னு உமர்(ரலி), ‘நீர் இங்கிருந்து புறப்படுவீராக!’ என்றார்.

ஹஜ்ஜாஜ், ‘இப்போதேவா? எனக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார். ஹஜ்ஜாஜ் ‘நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன்; அவகாசம் கொடுங்கள்’ எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் வரும்வரை, (தம் வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார். ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான், ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். இப்னு உமர்(ரலி) ‘(ஸாலிம்) உண்மையே கூறினார்’ என்றார்.
Book :25

(புகாரி: 1663)

بَابُ قَصْرِ الخُطْبَةِ بِعَرَفَةَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ

أَنَّ عَبْدَ المَلِكِ بْنَ مَرْوَانَ، كَتَبَ إِلَى الحَجَّاجِ أَنْ يَأْتَمَّ بِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ، جَاءَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَأَنَا مَعَهُ حِينَ زَاغَتِ الشَّمْسُ أَوْ زَالَتْ، فَصَاحَ عِنْدَ فُسْطَاطِهِ أَيْنَ هَذَا؟ فَخَرَجَ إِلَيْهِ فَقَالَ ابْنُ عُمَرَ: «الرَّوَاحَ» فَقَالَ: الآنَ، قَالَ: «نَعَمْ»، قَالَ: أَنْظِرْنِي أُفِيضُ عَلَيَّ مَاءً، فَنَزَلَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَتَّى خَرَجَ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي فَقُلْتُ: إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ اليَوْمَ فَاقْصُرِ الخُطْبَةَ وَعَجِّلِ الوُقُوفَ فَقَالَ ابْنُ عُمَرَ «صَدَقَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.