பாடம் : 34 முன் பின் இரு துவாரத்திலிருந்து ஏதேனும் வெளியேறினால் மட்டுமே உளூ முறியும் (துடக்கு ஏற்படும்).
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்து விட்டு) வந்தால்… (தொழுகைக்காக அங்கசுத்தி செய்து கொள்ளவேண்டும்.) (4:43).
ஒருவருடைய பின் துவாரத்திலிருந்து புழு அல்லது முன் துவாரத்திலிருந்து பேன் போன்ற சிறுபூச்சியோ வெளியேறினால் (அவருடைய அங்கசுத்தி நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் உளூச் செய்யவேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழவேண்டும் (உளூமுறிவதில்லை. ஆகவே,) திரும்பவும் உளூ செய்ய வேண்டியதில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் (தம் உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால் அல்லது தமது காலுறையைக் கழற்றிவிடுவதால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டியதில்லை என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சிறுதுடக்கு (தூய்மைக்கேடு) ஏற்பட்டால் தான் உளூவைத் திரும்பச் செய்யவேண்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தாத்துர் ரிகாஉ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர் மீது அம்பு பாய்ந்தது. அவருக்கு கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும் அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார் என ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
தங்களுடைய உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுது கொண்டேயிருந்தார்கள் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரத்தம் வெளிவருவதன் காரணமாக உளூவைத் திரும்பச் செய்யவேண்டியதில்லை என தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றுமுள்ள ஹிஜாஸ்வாசிகள் ஆகியோர் கூறியுள்ளனர்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் உடலிலிருந்து) சிறு கொப்புளத்தை நசுக்கினார்கள். அதிலிருந்து இரத்தம் வெளியானது. ஆனால் அவர்கள் திரும்பவும் உளூச் செய்யவில்லை.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ்நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக உளூவைத் திரும்பச்செய்யமாலே) அவர்கள் தொழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால் அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (உளூவை திரும்பச் செய்யவேண்டியதில்லை).
‘ஹதஸ்’ ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் ‘அபூ ஹுரைராவே! ‘ஹதஸ்’ என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு அவர் ‘பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம்’ என்று கூறினார்’ என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.
Book : 4
بَابُ مَنْ لَمْ يَرَ الوُضُوءَ إِلَّا مِنَ المَخْرَجَيْنِ: مِنَ القُبُلِ وَالدُّبُرِ
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ} [النساء: 43] وَقَالَ عَطَاءٌ: – فِيمَنْ يَخْرُجُ مِنْ دُبُرِهِ الدُّودُ، أَوْ مِنْ ذَكَرِهِ نَحْوُ القَمْلَةِ – «يُعِيدُ الوُضُوءَ» وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: «إِذَا ضَحِكَ فِي الصَّلاَةِ أَعَادَ الصَّلاَةَ وَلَمْ يُعِدِ الوُضُوءَ» وَقَالَ الحَسَنُ: «إِنْ أَخَذَ مِنْ شَعَرِهِ وَأَظْفَارِهِ، أَوْ خَلَعَ خُفَّيْهِ فَلاَ وُضُوءَ عَلَيْهِ» وَقَالَ أَبُو هُرَيْرَةَ: «لاَ وُضُوءَ إِلَّا مِنْ حَدَثٍ» وَيُذْكَرُ عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَرُمِيَ رَجُلٌ بِسَهْمٍ، فَنَزَفَهُ الدَّمُ، فَرَكَعَ، وَسَجَدَ وَمَضَى فِي صَلاَتِهِ» وَقَالَ الحَسَنُ: «مَا زَالَ المُسْلِمُونَ يُصَلُّونَ فِي جِرَاحَاتِهِمْ» وَقَالَ طَاوُسٌ، وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ، وَعَطَاءٌ، وَأَهْلُ الحِجَازِ لَيْسَ فِي الدَّمِ وُضُوءٌ وَعَصَرَ ابْنُ عُمَرَ بَثْرَةً فَخَرَجَ مِنْهَا الدَّمُ وَلَمْ يَتَوَضَّأْ وَبَزَقَ ابْنُ أَبِي أَوْفَى دَمًا فَمَضَى فِي صَلاَتِهِ ” وَقَالَ ابْنُ عُمَرَ، وَالحَسَنُ: ” فِيمَنْ يَحْتَجِمُ: لَيْسَ عَلَيْهِ إِلَّا غَسْلُ مَحَاجِمِهِ “
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ يَزَالُ العَبْدُ فِي صَلاَةٍ مَا كَانَ فِي المَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ مَا لَمْ يُحْدِثْ» فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: الصَّوْتُ يَعْنِي الضَّرْطَةَ
சமீப விமர்சனங்கள்