தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1762

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா, மர்வாவையும் வலம்வந்தார்கள். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் தோழர்கள் அனைவரும் வலம்வந்தார்கள். பிறகு அவர்களில் பலிப்பிராணி கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்க மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா வழிபாடுகளையும் செய்தோம்.

நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸப் என்னுமிடத்தில் தங்கியிருந்த வீடு திரும்ப வேண்டிய இரவில் நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்!’ என்றேன். அதற்கவர்கள், ‘நாம் மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ வலம் வரவில்லைதானே!’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீ உன்னுடைய சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்! மேலும் இன்னின்ன இடங்களில் என்னைச் சந்தித்துக் கொள்!’ எனக் கூறினார்கள்.

நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் சென்று உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய்! வலம்வந்துவிட்டாயல்லவா?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம்!’ என்றதும், ‘அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!’ என்றார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்காவாசிகளுடன் மேலே ஏறும்போது அவர்களை சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
Book :25

(புகாரி: 1762)

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نَرَى إِلَّا الحَجَّ، فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ وَلَمْ يَحِلَّ، وَكَانَ مَعَهُ الهَدْيُ، فَطَافَ مَنْ كَانَ مَعَهُ مِنْ نِسَائِهِ وَأَصْحَابِهِ، وَحَلَّ مِنْهُمْ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ الهَدْيُ، فَحَاضَتْ هِيَ، فَنَسَكْنَا مَنَاسِكَنَا مِنْ حَجِّنَا، فَلَمَّا كَانَ لَيْلَةَ الحَصْبَةِ، لَيْلَةُ النَّفْرِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّ أَصْحَابِكَ يَرْجِعُ بِحَجٍّ وَعُمْرَةٍ غَيْرِي، قَالَ: «مَا كُنْتِ تَطُوفِينَ بِالْبَيْتِ لَيَالِيَ قَدِمْنَا» قُلْتُ: لاَ، قَالَ: «فَاخْرُجِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ، وَمَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا». فَخَرَجْتُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ، وَحَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَقْرَى حَلْقَى، إِنَّكِ لَحَابِسَتُنَا، أَمَا كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَلاَ بَأْسَ انْفِرِي» فَلَقِيتُهُ مُصْعِدًا عَلَى أَهْلِ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ، وَقَالَ مُسَدَّدٌ: قُلْتُ: لاَ، تَابَعَهُ جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ فِي قَوْلِهِ: لاَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.