பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் தூத்துவாவில் தங்குவதும், மக்காவைவிட்டுத் திரும்பும் போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும்.
நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) ஃதூத்துவாவிலுள்ள இரண்டு கணவாய்களுக்கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ மக்காவிற்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமின் வாசலருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள்.
பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து தவாஃபை ஆரம்பிப்பார்கள். அந்த ஏழு சுற்றுக்களில் மூன்றில் ஓடியும் நான்கில் நடந்தும் வலம்வருவார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு, தம் கூடாரத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவார்கள்.
மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக்குத்) திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தை உட்கார வைத்துத் தங்கிய, துல்ஹு லைஃபாவிலுள்ள பத்ஹா என்னுமிடத்தில் வாகனத்தை உட்கார வைத்துத் தங்குவார்கள்.
Book : 25
بَابُ النُّزُولِ بِذِي طُوًى، قَبْلَ أَنْ يَدْخُلَ مَكَّةَ، وَالنُّزُولِ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الحُلَيْفَةِ، إِذَا رَجَعَ مِنْ مَكَّةَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ
أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَانَ يَبِيتُ بِذِي طُوًى، بَيْنَ الثَّنِيَّتَيْنِ، ثُمَّ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَكَانَ إِذَا قَدِمَ مَكَّةَ، حَاجًّا أَوْ مُعْتَمِرًا، لَمْ يُنِخْ نَاقَتَهُ إِلَّا عِنْدَ بَابِ المَسْجِدِ، ثُمَّ يَدْخُلُ، فَيَأْتِي الرُّكْنَ الأَسْوَدَ، فَيَبْدَأُ بِهِ، ثُمَّ يَطُوفُ سَبْعًا: ثَلاَثًا سَعْيًا وَأَرْبَعًا مَشْيًا، ثُمَّ يَنْصَرِفُ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَنْطَلِقُ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى مَنْزِلِهِ، فَيَطُوفُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، وَكَانَ إِذَا صَدَرَ عَنِ الحَجِّ أَوِ العُمْرَةِ «أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الحُلَيْفَةِ، الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنِيخُ بِهَا»
சமீப விமர்சனங்கள்