காலித் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்.
உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி(ஸல்) அவர்கள், உமர்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்!’ என நாஃபிவு(ரஹ்) அறிவித்தாக எங்களிடம் கூறினார்.
‘இப்னு உமர்(ரலி) முஹஸ்ஸபில் லுஹர், அஸர் தொழுகைகளைத் தொழுவது வழக்கம்!’ என நாஃபிவு(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
‘மக்ரிபு தொழுகையையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுவார்கள்’ என்றும் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்றும் உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இஷாவையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ(ரஹ்), உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
‘(இஷாவைத் தொழுத) பிறகு, இப்னு உமர்(ரலி) சிறிது நேரம் (அங்கேயே) உறங்கி விடுவார்கள்; பிறகு, ‘நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்’ என்றும் நாஃபிவு(ரஹ்) கூறினார்கள் என, உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
Book :25
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، قَالَ
سُئِلَ عُبَيْدُ اللَّهِ عَنِ المُحَصَّبِ، فَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ قَالَ: «نَزَلَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعُمَرُ، وَابْنُ عُمَرَ»، وَعَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «كَانَ يُصَلِّي بِهَا – يَعْنِي المُحَصَّبَ – الظُّهْرَ وَالعَصْرَ» أَحْسِبُهُ قَالَ: «وَالمَغْرِبَ»، قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي العِشَاءِ وَيَهْجَعُ هَجْعَةً، «وَيَذْكُرُ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
சமீப விமர்சனங்கள்