தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1790

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உர்வா(ரஹ்) அறிவித்தார்.

நான் சிறு வயதுள்ளவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்! எனவே, ஹஜ் அல்லது உம்ரா செய்கிறவர் அவ்விரண்டையும் வலம்வருவதில் எந்தக் குற்றமுமில்லை!’ (திருக்குர்ஆன் 02:158) என்று அல்லாஹ் கூறினான். எனவே ‘அவ்விரண்டிற்குமிடையே சஃயு செய்யாமலிருப்பதிலும் குற்றமில்லை என்றே கருதுகிறேன்!’ என்று கூறினேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) ‘அவ்வாறில்லை, நீ கருதுவது போலிருந்தால் ‘அவ்விரண்டையும் வலம்வராமலிருப்பதில் குற்றமில்லை!’ என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் அருளப்பட்டதாகும். (அறியாமைக் காலத்தில்) அவர்கள் ‘குதைத்’ என்ற இடத்தில், ‘மனாத்’ என்ற விக்கிரகத்திற்காக இஹ்ராம் அணிந்து வந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்வதைக் குற்றமாகவும் கருதி இருந்தனர்.

எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர்; அப்போது அல்லாஹ், ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் இறைவனின் அத்தாட்சிகளாகும்; எனவே, ஹஜ்ஜோ உம்ராவோ செய்பவர் அவ்விரண்டிற்குமிடையே சஃயு செய்வதால் அவரின் மீது எந்தக் குற்றமும் இல்லை!’ (திருக்குர்ஆன் 02:158) என்ற வசனத்தை அருளினான்’ எனக் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில் ‘ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யாதவனின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை!’ என்ற (ஆயிஷா(ரலி) அவர்களின்) சொல் இடம் பெற்றுள்ளது.
Book :26

(புகாரி: 1790)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ

قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا – زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ -: أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا، فَلاَ أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا، فَقَالَتْ عَائِشَةُ: ” كَلَّا، لَوْ كَانَتْ كَمَا تَقُولُ: كَانَتْ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا، إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى “: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]، زَادَ سُفْيَانُ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ: «مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ، وَلاَ عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.