தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1930

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 நோன்பாளி குளிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது ஓர் ஆடையை நனைத்துத் தம் மேல் போட்டுக் கொண்டார்கள்.

ஷஅபீ (ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது குளியலறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

(நோன்பாளி) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ, வேறெதையுமோ ருசி பார்ப்பதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி வாய் கொப்பளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக) தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலைவாரிக் கொள்ளட்டும்! என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அதனுள் அமிழ்வேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது பல் துலக்கினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது என்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தம் எச்சிலை விழுங்கினால் அவரது நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்! என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஈரமான குச்சியால் பல் துலக்குவதில் தவறில்லை! என்ற இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறிய போது அதற்கு ருசி இருக்கிறதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தண்ணீருக்குக் கூடத் தான் ருசி இருக்கிறது; அதன் மூலம் நீர் வாய்க் கொப்பளிக்கிறீரே? என்று கேட்டார்கள்.

நோன்பாளி கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இடுவது தவறில்லை என்று அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸரீ (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!’
Book : 30

(புகாரி: 1930)

بَابُ اغْتِسَالِ الصَّائِمِ

وَبَلَّ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثَوْبًا، فَأَلْقَاهُ عَلَيْهِ وَهُوَ صَائِمٌ وَدَخَلَ الشَّعْبِيُّ الحَمَّامَ وَهُوَ صَائِمٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَتَطَعَّمَ القِدْرَ أَوِ الشَّيْءَ وَقَالَ الحَسَنُ: ” لاَ بَأْسَ بِالْمَضْمَضَةِ، وَالتَّبَرُّدِ لِلصَّائِمِ وَقَالَ ابْنُ مَسْعُودٍ: ” إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلْيُصْبِحْ دَهِينًا مُتَرَجِّلًا

وَقَالَ أَنَسٌ: إِنَّ لِي أَبْزَنَ أَتَقَحَّمُ فِيهِ، وَأَنَا صَائِمٌ وَيُذْكَرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ اسْتَاكَ وَهُوَ صَائِمٌ وَقَالَ ابْنُ عُمَرَ: يَسْتَاكُ أَوَّلَ النَّهَارِ، وَآخِرَهُ، وَلاَ يَبْلَعُ رِيقَهُ

وَقَالَ عَطَاءٌ: «إِنِ ازْدَرَدَ رِيقَهُ لاَ أَقُولُ يُفْطِرُ»  وَقَالَ ابْنُ سِيرِينَ: «لاَ بَأْسَ بِالسِّوَاكِ الرَّطْبِ» قِيلَ: لَهُ طَعْمٌ؟ قَالَ: «وَالمَاءُ لَهُ طَعْمٌ وَأَنْتَ تُمَضْمِضُ بِهِ» وَلَمْ يَرَ أَنَسٌ، وَالحَسَنُ، وَإِبْرَاهِيمُ بِالكُحْلِ لِلصَّائِمِ بَأْسًا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَأَبِي بَكْرٍ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُدْرِكُهُ الفَجْرُ فِي رَمَضَانَ مِنْ غَيْرِ حُلْمٍ، فَيَغْتَسِلُ وَيَصُومُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.