தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1935

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தட்டும்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று. இந்தக் கூற்றில் நோன்பாளி, நோன்பு நோற்காதவர் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் கூறவில்லை.

நோன்பாளி, தொண்டைக்குள் செல்லாத வகையில் மூக்கிற்குள் மருந்துச் சொட்டுகளை விட்டுக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர் அஞ்சனமும் (-சுர்மா) இட்டுக் கொள்ளலாம் என்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் வாய் கொப்பளித்து, வாயிலுள்ள தண்ணீரைத் துப்பிவிட்டால் அதனால் (நோன்பிற்கு) எந்த பாதிப்பும் இல்லை; அவர் எச்சிலையும் வாயில் எஞ்சிய தண்ணீரையும் விழுங்காமல் இருக்க வேண்டும்;பிசின் (போன்ற பண்டங்)களை மெல்லக் கூடாது! அதனுடைய எச்சில் கலந்த சாற்றை விழுங்கவிட்டால் நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்; எனினும், அ(வ்வாறு விழுங்குவ)து தடுக்கப்பட வேண்டும்! மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தும் போது, தன்னையும் மீறி தண்ணீர் தொண்டைக்குள் நுழைந்து விட்டால் அதில் தவறில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 29 ரமளானில் (பகலில்) தாம்பத்தியஉறவு கொள்ளுதல்.

ஒருவர் ரமளானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ இன்றி விட்டுவிட்டால் அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள். அதற்குப் பகரமாக, அவர் வேறு ஒரு நாளில் நோன்பு நோற்க வேண்டும்! என்று ஹம்மாத், கத்தாதா,இப்ராஹீம் அந்நகஈ, இப்னு ஜுபைர், ஷஅபீ, சயீத் பின் முஸய்யப் (ரஹ் அலைஹிம்) ஆகியோர் கூறுகின்றனர்.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் எரிந்து போய்விட்டேன்!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்றார்கள். அவர், ‘ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன்!’ என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ‘அரக்’ என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது.

‘எரிந்து போனவர் எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நானே’ என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து.) ‘இதை தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 30

(புகாரி: 1935)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَوَضَّأَ، فَلْيَسْتَنْشِقْ بِمَنْخِرِهِ المَاءَ» وَلَمْ يُمَيِّزْ بَيْنَ الصَّائِمِ وَغَيْرِهِ

وَقَالَ الحَسَنُ: ” لاَ بَأْسَ بِالسَّعُوطِ لِلصَّائِمِ، إِنْ لَمْ يَصِلْ  إِلَى حَلْقِهِ، وَيَكْتَحِلُ

وَقَالَ عَطَاءٌ: ” إِنْ تَمَضْمَضَ، ثُمَّ أَفْرَغَ مَا فِي فِيهِ مِنَ المَاءِ لاَ يَضِيرُهُ إِنْ لَمْ يَزْدَرِدْ رِيقَهُ وَمَاذَا بَقِيَ فِي فِيهِ، وَلاَ يَمْضَغُ العِلْكَ، فَإِنِ ازْدَرَدَ رِيقَ العِلْكِ لاَ أَقُولُ إِنَّهُ يُفْطِرُ، وَلَكِنْ يُنْهَى عَنْهُ، فَإِنِ اسْتَنْثَرَ، فَدَخَلَ المَاءُ حَلْقَهُ لاَ بَأْسَ، لَمْ يَمْلِكْ

بَابُ إِذَا جَامَعَ فِي رَمَضَانَ

وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ: «مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلاَ مَرَضٍ، لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ وَإِنْ صَامَهُ» وَبِهِ قَالَ ابْنُ مَسْعُودٍ وَقَالَ سَعِيدُ بْنُ المُسَيِّبِ، وَالشَّعْبِيُّ، وَابْنُ جُبَيْرٍ، وَإِبْرَاهِيمُ، وَقَتَادَةُ، وَحَمَّادٌ: «يَقْضِي يَوْمًا مَكَانَهُ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ يَزِيدَ بْنَ هَارُونَ، حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ القَاسِمِ، أَخْبَرَهُ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ بْنِ خُوَيْلِدٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ

إِنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّهُ احْتَرَقَ، قَالَ: «مَا لَكَ؟»، قَالَ: أَصَبْتُ أَهْلِي فِي رَمَضَانَ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِكْتَلٍ يُدْعَى العَرَقَ، فَقَالَ: «أَيْنَ المُحْتَرِقُ» قَالَ: أَنَا، قَالَ: «تَصَدَّقْ بِهَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.