தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-203

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்’ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book :4

(புகாரி: 203)

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ الحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ المُغِيرَةِ، عَنْ أَبِيهِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ، فَاتَّبَعَهُ  المُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»


Bukhari-Tamil-
Bukhari-TamilMisc-203.
Bukhari-Shamila-203.
Bukhari-Alamiah-203.
Bukhari-JawamiulKalim-198.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அம்ர் பின் காலித்

3 . லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ்

4 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ

5 . ஸஃத் பின் இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான்-அல்குரைஷீ

6 . நாஃபிஃ பின் ஜுபைர்-அன்நவ்ஃபலீ

7 . உர்வா பின் முஃகீரா-அஸ்ஸகஃபீ

8 . முஃகிரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி)-அஸ்ஸகஃபீ


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.