பாடம் : 3 சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம்.
(பாவங்களில் சிக்கிக் கொள்ளாமல்) சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதைவிட மிகவும் எளிதான ஒன்றை நான் காணவில்லை! சந்தேகத்திற்கிடமானவற்றை நீர் விட்டுவிட்டு, சந்தேகத்திற்கிட மில்லாதவற்றின் பக்கம் சென்றுவிடுவீராக! (எனும் நபி போதனையைப் பின்பற்றியதால்தான் இறையச்சமுடைய சுயக்கட்டுப்பாடுடனான வாழ்க்கை வாழ்வது எனக்கு எளிதாயிற்று!) என்று ஹஸ்ஸான் பின் அபீ ஸினான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
கருப்பு நிறப் பெண் ஒருவர் (என்னிடம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும் தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை; பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு ‘இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி (அவளுடன் நீ வாழ முடியும்?’ என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூ இஹாப் தமீமியின் மகளாவார்!
Book : 34
بَابُ تَفْسِيرِ المُشَبَّهَاتِ
وَقَالَ حَسَّانُ بْنُ أَبِي سِنَانٍ: ” مَا رَأَيْتُ شَيْئًا أَهْوَنَ مِنَ الوَرَعِ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ امْرَأَةً سَوْدَاءَ جَاءَتْ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا، فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْرَضَ عَنْهُ، وَتَبَسَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَيْفَ وَقَدْ قِيلَ، وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ»
சமீப விமர்சனங்கள்