தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2063

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கடல்வழிப் பயணம் மேற் கொண்டு வியாபாரம் செய்தல்.

இதில் எந்தத் தவறுமில்லை! குர்ஆனில் கடல் பயணம் குறித்து அல்லாஹ், தகுந்த காரணத்தோடுதான் (தன் அருட்கொடையாக அதை வர்ணித்துக்) கூறியுள்ளான்! என்று ம(த்)தர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு,

நீங்கள் கடலிலிருந்து மிருதுவான (புத்தம் புதிய) மாமிசத்தைப் புசிப்பதற்காகவும், அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிக் கொணர்வதற்காகவும் அவன்தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்! இன்னும் அதில் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பல்களை நீர் காண்கின்றீர்!

(பல்வேறு நாடுகளுக்கும் சென்று) அவனது அருட்கொடையை நீங்கள் தேடுவதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் (உங்களுக்கு வசப்படுத்தித் தரப்பட்டு) உள்ளன! எனும் (16:14ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள) அல்ஃபுல்க் எனும் சொல் கப்பல்களைக் குறிக்கும். ஒருமை, பன்மை ஆகிய இருநிலைகளிலும் இச்சொல் ஆளப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தில் பிளந்து கொண்டு செல்லும் என்பதைக் குறிக்க மவாகிர எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. . இந்த வசனம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கப்பல்கள் காற்றைப் பிளந்து கொண்டு செல்கின்றன; இவ்வாறு காற்றைப் பிளந்து கொண்டு செல்ல பெரிய கப்பல்களால் (-அல்புல்குல் இழாம்)தாம் இயலும்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் கூறும்போது ‘அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று. தம் தேவையை நிறைவேற்றினார்!’ என்று குறிப்பிட்டார்கள்.
Book : 34

(புகாரி: 2063)

بَابُ  التِّجَارَةِ فِي البَحْرِ

وَقَالَ مَطَرٌ: «لاَ بَأْسَ بِهِ وَمَا ذَكَرَهُ اللَّهُ فِي القُرْآنِ إِلَّا بِحَقٍّ، ثُمَّ تَلاَ»: {وَتَرَى الفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ} [النحل: 14]

 وَالفُلْكُ: السُّفُنُ، الوَاحِدُ وَالجَمْعُ سَوَاءٌ

وَقَالَ مُجَاهِدٌ: تَمْخَرُ السُّفُنُ الرِّيحَ، وَلاَ تَمْخَرُ الرِّيحَ مِنَ السُّفُنِ إِلَّا الفُلْكُ العِظَامُ

وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ

«ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ، خَرَجَ إِلَى البَحْرِ، فَقَضَى حَاجَتَهُ»

وَسَاقَ الحَدِيثَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بِهَذَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.