தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2210

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95 வியாபாரம், வாடகை, அளவை, நிறுவை ஆகியவற்றில் மக்களுடைய வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணப்படியும் நடைமுறைப்படுத்துதல்.

உங்கள் வழக்கப்படி உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்! என்று நெசவாளர்களிடம் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பத்துக்கு வாங்கியதை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்! என்று முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூசுஃப்யானின் மனைவி ஹிந்த் (ரலி) அவர்களிடம், உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாயமான முறையில் உன் கணவரிடமிருந்து எடுத்துக் கொள்!என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான் : அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்! (4:6)

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; கழுதைக்குரிய வாடகை என்ன? என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கேட்ட போது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பங்கு! என்றார். ஹஸன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக் கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு, மற்றொரு முறை ஹஸன் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டு, வாடகை பேசாமல் அதில் ஏறிச் சென்றார்கள். எனவே, அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(அடிமையாயிருந்த) அபூ தைபா(ரலி), நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவரின் எஜமானார்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள அன்றாட வரியைக் குறைக்குமாறும் கட்டளையிட்டார்கள்.
Book : 34

(புகாரி: 2210)

بَابُ مَنْ أَجْرَى أَمْرَ الأَمْصَارِ عَلَى مَا يَتَعَارَفُونَ بَيْنَهُمْ: فِي البُيُوعِ وَالإِجَارَةِ وَالمِكْيَالِ وَالوَزْنِ، وَسُنَنِهِمْ عَلَى نِيَّاتِهِمْ وَمَذَاهِبِهِمُ المَشْهُورَةِ

وَقَالَ شُرَيْحٌ لِلْغَزَّالِينَ: «سُنَّتُكُمْ بَيْنَكُمْ رِبْحًا» وَقَالَ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ: «لاَ بَأْسَ العَشَرَةُ بِأَحَدَ عَشَرَ، وَيَأْخُذُ لِلنَّفَقَةِ رِبْحًا»

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِهِنْدٍ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ» وَقَالَ تَعَالَى: {وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} [النساء: 6]

وَاكْتَرَى الحَسَنُ، مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مِرْدَاسٍ: حِمَارًا، فَقَالَ: «بِكَمْ؟» قَالَ: بِدَانَقَيْنِ، فَرَكِبَهُ ثُمَّ جَاءَ مَرَّةً أُخْرَى، فَقَالَ: «الحِمَارَ الحِمَارَ»، فَرَكِبَهُ وَلَمْ يُشَارِطْهُ، فَبَعَثَ إِلَيْهِ بِنِصْفِ دِرْهَمٍ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«حَجَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.