தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2220

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் என் சுற்றத்தாருடன் நல்லுறவு, அடிமைகளை விடுதலை செய்தல், தர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்து வந்தேன்;

இவற்றிற்கு எனக்குக் கூலி உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீர் செய்த நற்செயல்(களுக்கான நற்கூலி)களுடனேயே நீர் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்!’ என்றார்கள்.
Book :34

(புகாரி: 2220)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ قَالَ

يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ أَوْ أَتَحَنَّتُ بِهَا فِي الجَاهِلِيَّةِ مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا أَجْرٌ؟ قَالَ حَكِيمٌ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ خَيْرٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.