ஷுஃப்ஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)
பாடம் : 1 நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல்.
அல்லாஹ் கூறுகிறான்: அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்: என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்! (இவரைப் போன்ற) வலிமையுள்ளவரும் நம்பிக்கைக்குரியவரும் தான் நீங்கள் கூலிக்கு அமர்த்துவதற்குச் சிறந்தவராவார். (28:26)
நம்பகமான கருவூலக் காப்பாளர் பற்றி அவரும் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார் என நபிமொழியொன்று கூறுகின்றது.
பதவியை விரும்புபவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதவி வழங்கவில்லை.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
‘பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) விதித்தார்கள்.
Book : 36
36 – كِتَابُ الشُّفْعَةِ
بَابٌ: الشُّفْعَةُ فِيمَا لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الحُدُودُ فَلاَ شُفْعَةَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الحُدُودُ، وَصُرِّفَتْ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ»
சமீப விமர்சனங்கள்