பாடம் : 22 ஒருவர் ஒரு நிலத்தை வாடகைக்கு வாங்கிய பின், வாடகைக்கு விட்டவரோ பெற்றவரோ இறந்து விட்டால்…?
தவணை முடியும்வரை வாடகைக்குப் பெற்றவரை வெளியேற்றும் உரிமை வாடகைக்கு விட்(டு விட்டு,இறந்து விட்)டவரின் குடும்பத்தினருக்கு இல்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
வாடகை ஒப்பந்தம் அதற்குரிய தவணை முடியும் வரை செல்லும்! என்று ஹகம் (ரஹ்), ஹஸன் அல்பஸரீ(ரஹ்), இயாஸ் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
கைபரில் உற்பத்தியாகும் பயிர்களில் பாதி, உழைப்பவருக்கும் பாதி இஸ்லாமிய அரசுக்கும் சேர வேண்டும் என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை (யூதர்களுக்குக்) கொடுத்தார்கள். இந்த ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலும் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அபூபக்ர் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களோ வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படவில்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘விளைச்சலில் பாதி என்ற அடிப்படையில் கைபருடைய நிலங்களை, உழைத்துப் பயிரிட்டுக் கொள்வதற்காக, யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள்!’
‘(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) விளைநிலங்களை அவற்றின் விளைச்சலில் ஏதேனும் (ஒரு பகுதியைப்) பெற்றுக் கொண்டு வாடகைக்கு (குத்தகைக்கு) கொடுக்கப்பட்டு வந்தன!’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாஃபிஉ(ரஹ்) கூறினார்.
Book : 37
بَابُ إِذَا اسْتَأْجَرَ أَرْضًا، فَمَاتَ أَحَدُهُمَا
وَقَالَ ابْنُ سِيرِينَ: «لَيْسَ لِأَهْلِهِ أَنْ يُخْرِجُوهُ إِلَى تَمَامِ الأَجَلِ»
وَقَالَ الحَكَمُ، وَالحَسَنُ، وَإِيَاسُ بْنُ مُعَاوِيَةَ: «تُمْضَى الإِجَارَةُ إِلَى أَجَلِهَا»
وَقَالَ ابْنُ عُمَرَ: «أَعْطَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ بِالشَّطْرِ»، فَكَانَ ذَلِكَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَصَدْرًا مِنْ خِلاَفَةِ عُمَرَ «وَلَمْ يُذْكَرْ أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ جَدَّدَا الإِجَارَةَ بَعْدَمَا قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ: أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا “، وَأَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُ: «أَنَّ المَزَارِعَ كَانَتْ تُكْرَى عَلَى شَيْءٍ»، سَمَّاهُ نَافِعٌ لاَ أَحْفَظُهُ
சமீப விமர்சனங்கள்