அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ தல்ஹா(ரலி) மதீனாவில் முஸ்லிம்களில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த ‘பைருஹா’ எனும் தோட்டம் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொத்துக்களில் இருந்தது.
நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
‘உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து (இறைவழியில்) செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது! என்ற (திருக்குர்ஆன் 03:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! ‘உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது!’ என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களில் ‘பைருஹா’ எனும் இந்தத் தோட்டமேயாகும்! இனிமேல், இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும்! இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன்! இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பும் விதத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!’ எனக் கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (நற்கூலி பெற்றுத் தரும் தரும காரியத்தில்தான் அது போகட்டுமே!) நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீர் (தர்மமாக) வழங்குவதையே விரும்புகிறேன்!’ எனக் கூறினார்கள்.
அபூ தல்ஹா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கு போட்டுக் கொடுத்தார்கள்.
Book :40
بَابُ إِذَا قَالَ الرَّجُلُ لِوَكِيلِهِ: ضَعْهُ حَيْثُ أَرَاكَ اللَّهُ، وَقَالَ الوَكِيلُ: قَدْ سَمِعْتُ مَا قُلْتَ
حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالًا، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَةَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، فَلَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [سورة: آل عمران، آية رقم: 92] قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [سورة: آل عمران، آية رقم: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا، وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ شِئْتَ، فَقَالَ: «بَخٍ، ذَلِكَ مَالٌ رَائِحٌ، ذَلِكَ مَالٌ رَائِحٌ، قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا، وَأَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ»، قَالَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ
تَابَعَهُ إِسْمَاعِيلُ، عَنْ مَالِكٍ، وَقَالَ رَوْحٌ، عَنْ مَالِكٍ: «رَابِحٌ»
சமீப விமர்சனங்கள்