தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2335

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (எவருக்கும் சொந்தமில்லாத புறம் போக்கான) தரிசு நிலத்தை ஒருவர் (பயிரிட்டு) உயிராக்கினால் அது அவருக்கே சொந்தம்.

மேலும், அலீ (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த இத்தகைய (புறம் போக்கான) தரிசு நிலங்கள் குறித்து இதே கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், எவர் ஒரு தரிசு நிலத்தை (பயிரிட்டு) உயிராக்குகின்றாரோ அது அவருக்கே சொந்தம் என்று கூறினார்கள்.

அம்ரு பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், (எவர் தரிசு நிலத்தை உயிராக்குகின்றாரோ அது அவருக்கே சொந்தம் என்று சொன்னதோடு,) அந்த நிலம் ஒரு முஸ்லிமுக்கு (அல்லது இஸ்லாமிய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும் முஸ்லிமல்லாதவருக்குச்) சொந்தமானதாக இருக்கக் கூடாது. (அப்போது தான் அதைப் பயிரிட்டவருக்கு அது சொந்தமாகும்.)

மேலும், அநியாயமாக (அடாவடித் தனமாக) அதில் பயிரிட்டு விட்டு, பிறகு அது எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிடவும் எவருக்கும் உரிமையில்லை என்று கூறினார்கள். இதே விஷயம் குறித்து ஜாபிர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிட மிருந்து செய்தி அறிவித்துள்ளார்கள்.

 அன்னை ஆயிஷா(ரலி) கூறினார்.

‘யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘உமர்(ரலி) தம் ஆட்சிக் காலத்தின்போது இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்’ என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.
Book : 41

(புகாரி: 2335)

بَابُ مَنْ أَحْيَا أَرْضًا مَوَاتًا

وَرَأَى ذَلِكَ عَلِيٌّ فِي أَرْضِ الخَرَابِ بِالكُوفَةِ مَوَاتٌ وَقَالَ عُمَرُ: «مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ» وَيُرْوَى عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «فِي غَيْرِ حَقِّ مُسْلِمٍ، وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ فِيهِ حَقٌّ» وَيُرْوَى فِيهِ عَنْ جَابِرٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ»، قَالَ عُرْوَةُ: «قَضَى بِهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي خِلاَفَتِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.