தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2336

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

 உமர்(ரலி) அறிவித்தார்.

‘அல் அகீக்’ பள்ளத்தாக்கின் கீழே (பத்னுல் வாதியில்) ‘துல் ஹுலைஃபா’ என்னுமிடத்தில், தம் ஓய்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் இரவைக் கழித்துக் கொண்டிருந்தபோது கனவொன்று கண்டார்கள். அதில் அவர்களுக்கு, ‘நீங்கள் அருள் வளம் நிரம்பிய (ஆசிர்வதிக்கப்பட்ட) ஒரு பள்ளத்தாக்கில் தங்கியுள்ளீர்கள்’ என்று கூறப்பட்டது.

(அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரலி) கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் ஒட்டகத்தை எங்கே மண்டியிட்டு அமரச் செய்வது வழக்கமோ அதே இடத்தில், இறைத்தூதர் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக, எங்கள் ஒட்டகத்தையும் சாலியும்(ரஹ்) மண்டியிட்டு அமரச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அந்த ஓய்விடம் ‘அகீக்’ பள்ளத்தாக்கின் அடி வாரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலுக்குக் கீழ்ப் பகுதியில் இருந்தது. பள்ளிவாசலிலிருந்து (வரும்) நடுவழியொன்று அந்த ஓய்விடத்திற்கும் நெடுஞ்சாலைக்கும் இடையே அமைந்திருந்தது.
Book : 41

(புகாரி: 2336)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيَ وَهُوَ فِي مُعَرَّسِهِ مِنْ ذِي الحُلَيْفَةِ فِي بَطْنِ الوَادِي، فَقِيلَ لَهُ: «إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ»، فَقَالَ مُوسَى: وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ بِالْمُنَاخِ الَّذِي «كَانَ عَبْدُ اللَّهِ يُنِيخُ بِهِ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  وَهُوَ أَسْفَلُ مِنَ المَسْجِدِ الَّذِي بِبَطْنِ الوَادِي، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذَلِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.