பாடம்: 19
நிலத்தைத் தங்கம் மற்றும் வெள்ளி (நாணயங்களு)க்காகக் குத்தகைக்கு விடுவது செல்லும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்கள் செய்யக் கூடியவற்றில் மிகவும் மேலானது தரிசு நிலத்தை (பயிர் செய்வதற்காக) வருட வாடகைக்கு எடுப்பதேயாகும் என்று கூறினார்கள்.
ராஃபிவு இப்னு கதீஜ் (ரலி) அறிவித்தார்:
என் தந்தையின் சகோதரர்கள் இருவர், ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் அல்லது நில உரிமையாளர்(களான நாங்கள்) வரையறுக்கிற (ஒரு பகுதி) விளைச்சலை எங்களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்குவிட்டு வந்தோம். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவிட்டார்கள்’ என்று என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹன்ழலா இப்னு கைஸ் (ரஹ்) கூறினார்:
ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அவர்களிடம், ‘தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடலாமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதில் (தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுவதில்) தவறில்லை’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் லைஸ் (ரஹ்), ‘ஹலாலையும் (அனுமதிக்கப்பட்டதையும்) ஹராமையும் (விலக்கப்பட்டதையும்) வேறுபடுத்தி விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் தடை செய்யப்பட்ட குத்தகை முறைகளை ஆய்வுக் கண்கொண்டு பார்ப்பார்களாயின் அவற்றிலுள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அனுமதிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 41
(புகாரி: 2346)بَابُ كِرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالفِضَّةِ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” إِنَّ أَمْثَلَ مَا أَنْتُمْ صَانِعُونَ: أَنْ تَسْتَأْجِرُوا الأَرْضَ البَيْضَاءَ، مِنَ السَّنَةِ إِلَى السَّنَةِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: حَدَّثَنِي عَمَّايَ
أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الأَرْضَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يَنْبُتُ عَلَى الأَرْبِعَاءِ أَوْ شَيْءٍ يَسْتَثْنِيهِ صَاحِبُ الأَرْضِ «فَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»، فَقُلْتُ لِرَافِعٍ: فَكَيْفَ هِيَ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ؟ فَقَالَ رَافِعٌ: «لَيْسَ بِهَا بَأْسٌ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ»، وَقَالَ اللَّيْثُ: «وَكَانَ الَّذِي نُهِيَ عَنْ ذَلِكَ مَا لَوْ نَظَرَ فِيهِ ذَوُو الفَهْمِ بِالحَلاَلِ وَالحَرَامِ، لَمْ يُجِيزُوهُ لِمَا فِيهِ مِنَ المُخَاطَرَةِ»
Bukhari-Tamil-2346.
Bukhari-TamilMisc-2346.
Bukhari-Shamila-2346.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்