தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-235

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்து விட்டால்… (என்ன சட்டம்?)

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஒரு அசுத்தமான பொருளின்) ருசியோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றி விடாமலிருக்கும் வரை எந்தத் தண்ணீரையும் பயன் படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள்.

ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) பரவாயில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.)

இறந்து விட்ட யானை போன்ற மிருகங் களின் எலும்புகள் விஷயத்தில் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவற்றின் எலும்புகளால் அவர்கள் தலைவாரிக் கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக் கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதை குற்றமென அவர்கள் கருதவில்லை.

முஹம்மத் பின் சீரீன், இப்றாஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்றமில்லை எனக் கூறியுள்ளனர். 

 ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 4

(புகாரி: 235)

بَابُ مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالمَاءِ

وَقَالَ الزُّهْرِيُّ: «لاَ بَأْسَ بِالْمَاءِ مَا لَمْ يُغَيِّرْهُ طَعْمٌ أَوْ رِيحٌ أَوْ لَوْنٌ»

وَقَالَ حَمَّادٌ: «لاَ بَأْسَ بِرِيشِ المَيْتَةِ»

وَقَالَ الزُّهْرِيُّ: ” فِي عِظَامِ المَوْتَى، نَحْوَ الفِيلِ وَغَيْرِهِ: أَدْرَكْتُ نَاسًا مِنْ سَلَفِ العُلَمَاءِ، يَمْتَشِطُونَ بِهَا، وَيَدَّهِنُونَ فِيهَا، لاَ يَرَوْنَ بِهِ بَأْسًا “

وَقَالَ ابْنُ سِيرِينَ وَإِبْرَاهِيمُ: «وَلاَ بَأْسَ بِتِجَارَةِ العَاجِ»

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ، وَكُلُوا سَمْنَكُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.