தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2367

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42

(புகாரி: 2367)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَذُودَنَّ رِجَالًا عَنْ حَوْضِي، كَمَا تُذَادُ الغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الحَوْضِ»





3 comments on Bukhari-2367

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    கவுசர் தடாகத்திலிருந்து மலக்குமார்கள் தான் நபி (சல்) அவர்களின் தோழர்களை தடுப்பதாக அதீஸ் வருகிறது இந்த செய்தியில் நபி அவர்கள் தடுப்பதாக ஹதீஸ் வருகிறது இரண்டு ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது ? விளக்கம் தரவும்…

    1. வ அலைக்கும் ஸலாம்.

      புகாரி-6584 6583 இல் வரும் செய்தியின் அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும். முதலில் வானவர்கள் தடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு காரணம் புரிந்தபின் அவர்களும் தடுப்பார்கள். இந்த உலகிலேயே நபி (ஸல்) அவர்கள் நமக்கு இப்படி கூறியிருந்தாலும் மறுமையில் இது நடைபெறுவதற்காகவே அல்லாஹ் அவர்களை மறந்துவிடுமாறு செய்யலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.