தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2393

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒரு முறை) அம்மனிதர் தன் ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குக் கொடுங்கள்’ என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள், ‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவர், தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே’ என்று கூறினார்கள்.
Book : 43

(புகாரி: 2393)

بَابُ حُسْنِ القَضَاءِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِنٌّ مِنَ الإِبِلِ، فَجَاءَهُ يَتَقَاضَاهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوهُ»، فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلَّا سِنًّا فَوْقَهَا، فَقَالَ: «أَعْطُوهُ»، فَقَالَ: أَوْفَيْتَنِي وَفَى اللَّهُ بِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.