தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2404

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 தவணை குறிப்பிட்டு (இந்தக் கால கட்டத்திற்குள் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்று) கடன் கொடுப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட தவணையில் விலையைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒரு பொருளை விற்பது.

ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தும்படி கூறி கடன் கொடுப்பதில் தவறில்லை; கடனாளி கடன் கொடுத்தவருக்கு அவர் கொடுத்த திர்ஹம்களை விட உயர்தரமானதைக் கொடுத்தாலும் சரியே! ஆனால் கடன்காரர், அவ்விதம் திருப்பிச் செலுத்தும் போது உயர் தரமானதைத் தரவேண்டுமென்று (கடனாளிக்கு) நிபந்தனையிடக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

கடன் வாங்கியவர், தனக்குக் குறிப்பிடப்பட்ட தவணையைப் பேணி நடக்க வேண்டும் என்று அதா (ரஹ்) அவர்களும் அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூர்ந்தார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தி விடவேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்…
(இது முன்பே கிதாபுல் கஃபாலாவில் சென்றுவிட்டது.)
Book : 43

(புகாரி: 2404)

بَابُ إِذَا أَقْرَضَهُ إِلَى أَجَلٍ مُسَمًّى، أَوْ أَجَّلَهُ فِي البَيْعِ

قَالَ ابْنُ عُمَرَ فِي القَرْضِ إِلَى أَجَلٍ: «لاَ بَأْسَ بِهِ، وَإِنْ أُعْطِيَ أَفْضَلَ مِنْ دَرَاهِمِهِ، مَا لَمْ يَشْتَرِطْ» وَقَالَ عَطَاءٌ، وَعَمْرُو بْنُ دِينَارٍ: «هُوَ إِلَى أَجَلِهِ فِي القَرْضِ»

وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَنَّهُ ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ، سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى»، فَذَكَرَ الحَدِيثَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.