தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2407

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 செல்வத்தை வீணடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

திண்ணமாக, அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205)

சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81)

(மத்யன் நகரவாசிகள்) ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டு விடவேண்டும் என்றா, அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது? என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (11:87)

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விபரமறியாதவர்(களாய் உள்ள அனாதை)களிடம் ஒப்படைக் காதீர்கள். (4:5)

விபரமறியாதவரின் பொருளாதார நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். மேலும், மோசடியும் தடை செய்யப்பட்டதாகும்.

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப்பட்டு விடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது அல்லது விற்கும் போது) ‘மோசடி கூடாது’ என்று சொல்’ என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக் கொண்டிருந்தார்.
Book : 43

(புகாரி: 2407)

بَابُ مَا يُنْهَى عَنْ إِضَاعَةِ المَالِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاللَّهُ لاَ يُحِبُّ الفَسَادَ} [البقرة: 205]

وَ {لاَ يُصْلِحُ عَمَلَ المُفْسِدِينَ} [يونس: 81]

وَقَالَ فِي قَوْلِهِ: (أَصَلَوَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ)

وَقَالَ: {وَلاَ تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ} [النساء: 5] «وَالحَجْرِ فِي ذَلِكَ، وَمَا يُنْهَى عَنِ الخِدَاعِ»

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي أُخْدَعُ فِي البُيُوعِ، فَقَالَ: إِذَا بَايَعْتَ فَقُلْ: لاَ خِلاَبَةَ

فَكَانَ الرَّجُلُ يَقُولُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.