தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2418

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரிடையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்துவிட்டது. எந்த அளவுக்கென்றால் இறைத்தூதர்(ஸல்) தம் வீட்டிலிருக்க, அவர்களும் எங்கள் குரலைச் செவியுற்று, தம் அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, ‘கஅபே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ வந்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்’ என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் (இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களை நோக்கி,) ‘எழுந்து சென்று கடனை அடைப்பீராக!’ என்று கூறினார்கள்.
Book :44

(புகாரி: 2418)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى: «يَا كَعْبُ»، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا»، فَأَوْمَأَ إِلَيْهِ – أَيِ الشَّطْرَ – قَالَ: لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُمْ فَاقْضِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.