பாடம் : 3 வழி தவறிய ஆடு.
ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு, ஓராண்டுக் காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள்.
பின்னர் அறிவிப்பாளர் யஸீத்(ரஹ்) கூறினார்.
அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடம் அடைக்கலப் பொருளாக இருக்கும்.
இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும் அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்களின் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்.
பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), ‘வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் யஸீத்(ரஹ்), ‘அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்கள்.
பிறகு அந்த நபர், ‘வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அதை (அப்படியே)விட்டுவிடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கிறது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கிறது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கிறது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரங்களிலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது’ என்று பதில் கூறினார்கள்.
Book : 45
بَابُ ضَالَّةِ الغَنَمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ، أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللُّقَطَةِ، فَزَعَمَ أَنَّهُ قَالَ: «اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً» – يَقُولُ يَزِيدُ: ” إِنْ لَمْ تُعْرَفْ اسْتَنْفَقَ بِهَا صَاحِبُهَا، وَكَانَتْ وَدِيعَةً عِنْدَهُ، قَالَ يَحْيَى: فَهَذَا الَّذِي لاَ أَدْرِي أَفِي حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ، أَمْ شَيْءٌ مِنْ عِنْدِهِ؟ – ثُمَّ قَالَ: كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الغَنَمِ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ» – قَالَ يَزِيدُ: وَهِيَ تُعَرَّفُ أَيْضًا – ثُمَّ قَالَ: كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الإِبِلِ؟ قَالَ: فَقَالَ: «دَعْهَا فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا، تَرِدُ المَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَجِدَهَا رَبُّهَا»
சமீப விமர்சனங்கள்