தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2436

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருடம் கழித்து வந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் கண்டெடுத்தவரின் பொறுப்பிலிருந்த அடைக்கலப் பொருளாகும்.

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக் கொள். அதன் உரிமையாளர் வந்து அடையாளம் (சரியாகக்) கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்திவிடு’ என்று கூறினார்கள்.

அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன் அல்லது அவர்களின் முகம் சிவந்துவிட்டது.

பிறகு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் எஜமான் அதைச் சந்திக்கும் வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள (அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கிறதே’ என்று கூறினார்கள்.
Book : 45

(புகாரி: 2436)

بَابُ إِذَا جَاءَ صَاحِبُ اللُّقَطَةِ بَعْدَ سَنَةٍ رَدَّهَا عَلَيْهِ، لِأَنَّهَا وَدِيعَةٌ عِنْدَهُ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اللُّقَطَةِ، قَالَ: «عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا، فَأَدِّهَا إِلَيْهِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الغَنَمِ؟ قَالَ: «خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الإِبِلِ؟ قَالَ: فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ – أَوِ احْمَرَّ وَجْهُهُ – ثُمَّ قَالَ: «مَا لَكَ وَلَهَا مَعَهَا حِذَاؤُهَا، وَسِقَاؤُهَا، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.