பாடம் : 11 கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்து விட்டு ஆட்சியாளரிடம் அதை ஒப்படைக்காமல் இருத்தல்.
ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை (உறை)யையும் முடிச்சையும் (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென்றால் அதைச் செலவழித்துக் கொள்’ என்று கூறினார்கள்.
பிறகு, அவர் நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம்பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கே தாகம் தணித்துக் கொள்கிறது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது. அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அதைவிட்டு விடு’ என்று கூறினார்கள்.
அவர் நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டதற்கு, ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 45
بَابُ مَنْ عَرَّفَ اللُّقَطَةَ وَلَمْ يَدْفَعْهَا إِلَى السُّلْطَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اللُّقَطَةِ، قَالَ: «عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعِفَاصِهَا، وَوِكَائِهَا، وَإِلَّا فَاسْتَنْفِقْ بِهَا»، وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الإِبِلِ؟ فَتَمَعَّرَ وَجْهُهُ، وَقَالَ: «مَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا تَرِدُ المَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، دَعْهَا حَتَّى يَجِدَهَا رَبُّهَا» وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الغَنَمِ؟ فَقَالَ: «هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ»
சமீப விமர்சனங்கள்