தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2447

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அக்கிரமக்காரனைப் பழிவாங்குதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறு வோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (4:148)

மேலும், அவர்கள் (நம்பிக்கையாளர்கள்) தங்கள் மீது அநீதியிழைக்கப்படும் போது அதை எதிர்த்துப் போராடுகின்றார்கள். (42:39)

வர்கள் இழிவுபடுத்தப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தனர். அவர்கள் பழிவாங்கும் சக்தியுடையவர்களாக மாறும் போது மன்னித்து விடுவார்கள் என்று இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் (இந்த வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

பாடம் : 7 அக்கிரமக்காரனை மன்னித்தல்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஆனால், நீங்கள் வெளிப்படையாக வும் மறைவாகவும் நற்செயலைச் செய்த வண்ணம் இருந்தால், அல்லது குறைந்த பட்சம் அக்கிரமக்காரர்களின் தீங்கை மன்னித்து விட்டால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். (என்றாலும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். (4:149)

தீமையின் பலன் அதே போன்ற தீமையே ஆகும். இனி, எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக்காரர்களை நேசிப்பதில்லை. எவர் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழிவாங்குகின்றார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற முடியாது.

ஆட்சே பணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள் மீது கொடுமை இழைப்பவர்களும் இன்னும், நியாயமின்றி பூமியில் வரம்பு மீறிய செயல் புரிபவர்களும் தாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. ஆயினும், யார் பொறுமையை மேற்கொண்டு, மன்னித்து விடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதிமிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்…

ஒருவரை அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்தி விட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறு யாரும் இல்லை. இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையைப் பார்க்கும் போது, இனி, உலக வாழ்விற்குத் திரும்பச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கின்றதா? என்று கேட்பதை நீர் காண்பீர். (42:40-44)

பாடம் : 8 அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 46

(புகாரி: 2447)

بَابُ الِانْتِصَارِ مِنَ الظَّالِمِ

لِقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {لاَ يُحِبُّ اللَّهُ الجَهْرَ بِالسُّوءِ مِنَ القَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ، وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا} [النساء: 148] {وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ البَغْيُ هُمْ يَنْتَصِرُونَ} [الشورى: 39]

قَالَ إِبْرَاهِيمُ: «كَانُوا يَكْرَهُونَ أَنْ يُسْتَذَلُّوا، فَإِذَا قَدَرُوا عَفَوْا»

بَابُ عَفْوِ المَظْلُومِ

لِقَوْلِهِ تَعَالَى: {إِنْ تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَنْ سُوءٍ فَإِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا} [النساء: 149] {وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا، فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، إِنَّهُ لاَ يُحِبُّ الظَّالِمِينَ، وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ، إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ، وَيَبْغُونَ فِي الأَرْضِ بِغَيْرِ الحَقِّ، أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ، وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الأُمُورِ} [الشورى: 41]، {وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا العَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِنْ سَبِيلٍ} [الشورى: 44]

بَابٌ: الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ المَاجِشُونُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.