தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2505 & 2506

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 தியாகப் பிராணியிலும் தியாக ஒட்டகத்திலும் கூட்டாகுதல்.

ஒருவர் தியாகப் பிராணியை பலி கொடுத்த பின்னர் அதில் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்ளலாமா?

2505. & 2506. ஜாபிர்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹஜ்ஜின் நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக மட்டும் அவர்களு(டைய ஹஜ்ஜுடைய நிய்யத்து)டன் (உம்ரா) எதுவும் கலந்து விடாமல் இஹ்ராம் அணிந்தவர்களாக வந்தார்கள். நாங்கள் வந்து சேர்ந்தபோது நாங்கள் இஹ்ராம் அணிந்ததை உம்ராவாக ஆக்கிக் கொள்ளும்படியும் எங்கள் மனைவிமார்களிடம் நாங்கள் உறவு கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம்.

மக்களிடையே இந்த விஷயம் பரவிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் வியப்புடன் பேசிக் கொள்ளலாயினர்.

அறிவிப்பாளர் அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்:

பிறகு ஜாபிர்(ரலி), ‘எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்க, (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாங்கள் மினாவுக்குச் செல்வதா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அப்போது ஜாபிர்(ரலி) தம் கையால் சைகை செய்து இவ்வாறு கேட்டார்கள்.’..

இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்கள் சிலர் இப்படி ‘இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. இறைவன் மீதாணையாக! நான் அவர்களை விட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவனும் ஆவேன். என் விவகாரத்தில் (ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்ததில்) நான் பிற்பாடு (இறையறிவிப்பின் வாயிலாக) அறிந்த (‘ஹஜ் மாதத்தில் உம்ரா செய்ய அனுமதியுண்டு’ என்கிற சட்டத்)தை முன்கூட்டியே நான் அறிந்திருப்பேனாயின் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன்.

என்னுடன் பலிப்பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விட்டிருப்பேன்.’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுரக்காக இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டும் தானா? இல்லை, என்றைக்குமாகவா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(உங்களுக்கு மட்டும் என்று) இல்லை; மாறாக, என்றைக்குமாகத் தான்’ என்று கூறினார்கள். அப்போது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள்.

அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) கூறினார்கள்:

ஜாபிர்(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர்(ரலி)), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்துள்ளார்களோ அதே ஹஜ்ஜுக்காகத்தான் நானும் இஹ்ராம் அணிகிறேன்’ என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார்.

மற்றொருவர், (இப்னு அப்பாஸ்(ரலி)), ‘அல்லாஹ்வின் தூதருடைய ஹஜ்ஜைப் போன்றதற்கே (ஹஜ்ஜும்ரானுக்கே) நானும் இஹ்ராம் அணிகிறேன்’ என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தம் தியாக பிராணியில் அவர்களையும் கூட்டாளியாக்கினார்கள்.
Book : 47

(புகாரி: 2505 & 2506)

بَابُ الِاشْتِرَاكِ فِي الهَدْيِ وَالبُدْنِ، وَإِذَا أَشْرَكَ الرَّجُلُ الرَّجُلَ فِي هَدْيِهِ بَعْدَ مَا أَهْدَى

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ المَلِكِ بْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، وَعَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالاَ

قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ صُبْحَ رَابِعَةٍ مِنْ ذِي الحِجَّةِ مُهِلِّينَ بِالحَجِّ، لاَ يَخْلِطُهُمْ شَيْءٌ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا، فَجَعَلْنَاهَا عُمْرَةً وَأَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا، فَفَشَتْ فِي ذَلِكَ القَالَةُ قَالَ عَطَاءٌ: فَقَالَ جَابِرٌ: فَيَرُوحُ أَحَدُنَا إِلَى مِنًى، وَذَكَرُهُ يَقْطُرُ مَنِيًّا، فَقَالَ جَابِرٌ بِكَفِّهِ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ خَطِيبًا، فَقَالَ: «بَلَغَنِي أَنَّ أَقْوَامًا يَقُولُونَ كَذَا وَكَذَا، وَاللَّهِ لَأَنَا أَبَرُّ وَأَتْقَى لِلَّهِ مِنْهُمْ، وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الهَدْيَ لأَحْلَلْتُ» فَقَامَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هِيَ لَنَا أَوْ لِلْأَبَدِ؟ فَقَالَ: «لاَ، بَلْ لِلْأَبَدِ» قَالَ: وَجَاءَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ أَحَدُهُمَا: يَقُولُ لَبَّيْكَ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: وَقَالَ الآخَرُ: لَبَّيْكَ بِحَجَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَأَشْرَكَهُ فِي الهَدْيِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.