தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2528

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

அடிமையை விடுதலை செய்தல், விவாகரத்து செய்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும்; மேலும், அல்லாஹ்வின் திருப்திக்காகவே தவிர அடிமையை விடுதலை செய்வது கூடாது என்பதும்.

ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், (ஒன்றை) மறந்து விட்டவனுக்கும், தவறுதலாகச் செய்து விட்டவனுக்கும் நிய்யத் (எண்ணம்) என்பதே கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 49

(புகாரி: 2528)

بَابُ الخَطَإِ وَالنِّسْيَانِ فِي العَتَاقَةِ وَالطَّلاَقِ وَنَحْوِهِ، وَلاَ عَتَاقَةَ إِلَّا لِوَجْهِ اللَّهِ

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ امْرِئٍ مَا نَوَى» وَلاَ نِيَّةَ لِلنَّاسِي وَالمُخْطِئِ

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ»


Bukhari-Tamil-2528.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2528.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-2355.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுராரா —> அபூ ஹுரைரா (ரலி)

பார்க்க: புகாரி-2528 , 5269 , 6664 , முஸ்லிம்-201 , 202 , இப்னு மாஜா-2040 , 2044 , அபூதாவூத்-2209 , திர்மிதீ-1183 , நஸாயீ-3434 , 3435 , …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னுமாஜா: 2045 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.