தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2531

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நான் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், ‘எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது’ என்று பாடினேன். வழியில் என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடிவிட்டான்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி(ஸல்) அவர்களிடமே இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான்.

உடனே நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அபுஹுரைராவே! இதோ உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டான் (பாருங்கள்)’ என்று கூறினார்கள். நான், ‘அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; (என்று) அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக (அறிவிக்கிறேன்)’ என்று கூறினேன்; அவ்விதம் (கூறி) அவனை விடுதலை செய்துவிட்டேன்.

அபூ அப்தில்லாஹ் புகாரி(யாகிய நான்) கூறுகிறேன்:
இந்த அறிவிப்பாளர் தொடரிலுள்ள அபூ உஸாமாவிடமிருந்து இதே ஹதீஸை அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளரான அபூ குரைப் அவர்களின் அறிவிப்பில் ‘(அவன்) சுதந்திரமானவன்’ என்னும் சொல் மட்டும் இல்லை.
Book :49

(புகாரி: 2531)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ فِي الطَّرِيقِ:
[البحر الطويل]
يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا … عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الكُفْرِ نَجَّتِ
قَالَ: وَأَبَقَ مِنِّي غُلاَمٌ لِي فِي الطَّرِيقِ، قَالَ: فَلَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَايَعْتُهُ، فَبَيْنَا أَنَا عِنْدَهُ إِذْ طَلَعَ الغُلاَمُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، هَذَا غُلاَمُكَ» فَقُلْتُ: هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ، فَأَعْتَقْتُهُ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: لَمْ يَقُلْ أَبُو كُرَيْبٍ، عَنْ أَبِي أُسَامَةَ حُرٌّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.