தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2537

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 ஒருவருடைய சகோதரர், அல்லது தந்தையின் சகோதரர் இணைவைப் பவராக இருக்கும் நிலையில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டால் (அவர்களை விடுதலை செய்வதற்கு) பிணைத் தொகை பெறத் தான் வேண்டுமா?

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன் என்று கூறினார்கள். தமது சகோதரர் அகீல் அவர்களிட மிருந்தும் தம் தந்தையின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் பெற்ற போர்ச் செல்வத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் பங்கிருந்தது.

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், ‘எங்கள் சகோதரி மகன் அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை)விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று அனுமதி கோரினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘அவரிடமிருந்து ஒரு திர்ஹமைக் கூட (வாங்காமல்)விட்டு விடாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book : 49

(புகாரி: 2537)

بَابُ إِذَا أُسِرَ أَخُو الرَّجُلِ، أَوْ عَمُّهُ، هَلْ يُفَادَى إِذَا كَانَ مُشْرِكًا

وَقَالَ أَنَسٌ: قَالَ العَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلًا «وَكَانَ عَلِيٌّ لَهُ نَصِيبٌ فِي تِلْكَ الغَنِيمَةِ الَّتِي أَصَابَ مِنْ أَخِيهِ عَقِيلٍ وَعَمِّهِ عَبَّاسٍ»

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رِجَالًا مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ائْذَنْ لَنَا، فَلْنَتْرُكْ لِابْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ، فَقَالَ: «لاَ تَدَعُونَ مِنْهُ دِرْهَمًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.