தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2539 & 2540

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அரபி அடிமையை உடைமையாக்கிக் கொள்வதும், அந்த அடிமையை அன்பளிப்பாக வழங்குவதும், விலைக்கு விற்பதும், உடலுறவு கொள்வதும், அவனிடம் பிணைத் தொகை பெறுவதும், அவனுடைய மக்களை அடிமைகளாக்கிக் கொள்வதும் (அனுமதிக்கப்பட்டது).

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலிருந்து மறைமுகமாகவும் வெளிப் படையாகவும் செலவு செய்கின்றார்.

(கூறுங்கள்:) இவ்விருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ்… எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந் நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை. (16:75)15

2539 & 2540. மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்கள் செல்வங்களையும் முஸ்லிம்களால் (சிறைபிடிக்கப்பட்ட) போர்க் கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் (அக்குழுவினரை) எழுந்து நின்று (வரவேற்று), ‘என்னுடன் நீங்கள் பார்க்கிற (மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையான பேச்சே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, செல்வங்கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்தே இருந்தேன்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றையே திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்’ என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து (உரையாற்றலானார்கள். அப்போது) ‘உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களின் (குலத்தினரின்) கைதிகளைத் திருப்பித் தந்து விட விரும்புகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறவர் செய்யட்டும் (திருப்பித் தந்து விடட்டும்). தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர் அல்லாஹ் நமக்கு (அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாகக்) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை அவ்வாறே செய்யட்டும்.

(தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், ‘நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்து விடுகிறோம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்று நாம் அறியமாட்டோம். எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்.

உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)’ என்று கூறினார்கள். எனவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களிடையேயுள்ள தலைவர்கள் அவர்களுடன் (கலந்து) பேசினர். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.

அனஸ்(ரலி) கூறினார்.

அப்பாஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன்’ என்று கூறினார்கள்.
Book : 49

(புகாரி: 2539 & 2540)

بَابُ مَنْ مَلَكَ مِنَ العَرَبِ رَقِيقًا، فَوَهَبَ وَبَاعَ وَجَامَعَ وَفَدَى وَسَبَى الذُّرِّيَّةَ

وَقَوْلِهِ تَعَالَى: {ضَرَبَ اللَّهُ مَثَلًا عَبْدًا مَمْلُوكًا لاَ يَقْدِرُ عَلَى شَيْءٍ، وَمَنْ رَزَقْنَاهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَجَهْرًا، هَلْ يَسْتَوُونَ الحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لاَ يَعْلَمُونَ} [النحل: 75]

حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ذَكَرَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ، فَقَالَ: ” إِنَّ مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الحَدِيثِ إِلَيَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ: إِمَّا المَالَ وَإِمَّا السَّبْيَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ “، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلَّا إِحْدَى الطَّائِفَتَيْنِ، قَالُوا: فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ»، فَقَالَ النَّاسُ: طَيَّبْنَا لَكَ ذَلِكَ، قَالَ: «إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ» فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ: أَنَّهُمْ طَيَّبُوا وَأَذِنُوا، فَهَذَا الَّذِي بَلَغَنَا عَنْ سَبْيِ هَوَازِنَ، وَقَالَ أَنَسٌ: قَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.