பாடம் 1 தன் அடிமையைப் பற்றி அவதூறு கூறியவன் பாவம் செய்தவன் ஆவான்.
2 பாடம் : 1 முகாத்தபும் அவனது விலையை ஆண்டுதோறும் தவணை முறையில் செலுத்துவதும்.
அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் அடிமைகளில் எவர் விடுதலைப் பத்திரம் எழுதித் தரும்படி கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். மேலும்,அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். (24:33)
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களிடம், என் அடிமையிடம் பொருள் (பணம்) இருப்பதாக நான் அறிந்தால் அவனுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுப்பது என் மீது கடமையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அதைக் கடமையாகவே கருதுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதா (ரஹ்) அவர்களிடம், இதை எந்த நபித் தோழரிடமிருந்தாவது கேட்டுத் தான் அறிவிக்கிறீரா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு (முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களின் தந்தையான) சீரீன் (ரஹ்) அவர்கள்அதிக செல்வத்தை வைத்துக் கொண்டு – அனஸ் (ரலி) அவர்களிடம் விடுதலைப் பத்திரம் எழுதித் தரும்படி கேட்க, அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் உடனே, சீரின் (ரஹ்) அவர்கள்-இவர் அதிக செல்வமுடையவராக இருந்தார்- உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறையிட்டதாகவும் அதற்கு உமர் (ரலி) அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடம் எழுதிக் கொடுங்கள் என்று கூற, அவர் மறுத்து விடவே உமர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைச் சாட்டையால் அடித்து மேற்கண்ட (24:33) இறை வசனத்தை ஓதிக் காட்டியதாகவும் பிறகு அனஸ் (ரலி) அவர்கள், சீரீன் (ரஹ்) அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எனக்கு (இப்னு ஜுரைஜுக்கு) அதாவு (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஊக்கியாக்களை- ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே, நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் எஜமானர்களுக்கு) ஒரே முறையில் முழுத்தொகையையும் செலுத்திவிட்டால், உன் எஜமானர்கள் உன்னை எனக்கு விற்றுவிட, நான் உன்னை விடுதலை செய்து உனது வலாவை (வாரிசுரிமையை) நான் அடைந்துக் கொள்ள முடியுமா? (அதற்கு உன் எஜமானர்கள் சம்மதிப்பார்களா?) நீ என்ன கருதுகிறாய்? என்று கேட்டேன். உடனே பரீரா (ரலி), தன் எஜமானர்களிடம் சென்று எனது நிபந்தனையை அவர்கள் முன் வைத்தார். அதற்கு அவர்கள், இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறினார்கள். (இதை அறிந்த) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னிடம் (அவரை) விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் எல்லாம் விதிக்கின்றர்களே! ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தக்கதும் உறுதிமிக்கதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும் என்று கூறினார்கள்.
Book : 49
50 – كتاب المكاتب
بَابُ المُكَاتِبِ، وَنُجُومِهِ فِي كُلِّ سَنَةٍ نَجْمٌ
وَقَوْلِهِ: {وَالَّذِينَ يَبْتَغُونَ الكِتَابَ مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ، فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا، وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ} [النور: 33] وَقَالَ رَوْحٌ: عَنْ ابْنِ جُرَيْجٍ، قُلْتُ لِعَطَاءٍ: أَوَاجِبٌ عَلَيَّ إِذَا عَلِمْتُ لَهُ مَالًا، أَنْ أُكَاتِبَهُ؟ قَالَ: «مَا أُرَاهُ إِلَّا وَاجِبًا» وَقَالَهُ عَمْرُو بْنُ دِينَارٍ قُلْتُ لِعَطَاءٍ: تَأْثُرُهُ عَنْ أَحَدٍ، قَالَ: «لاَ» ثُمَّ أَخْبَرَنِي أَنَّ مُوسَى بْنَ أَنَسٍ أَخْبَرَهُ، أَنَّ سِيرِينَ، سَأَلَ أَنَسًا، المُكَاتَبَةَ – وَكَانَ كَثِيرَ المَالِ – فَأَبَى، فَانْطَلَقَ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كَاتِبْهُ فَأَبَى، فَضَرَبَهُ بِالدِّرَّةِ، ” وَيَتْلُو عُمَرُ: {فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا} [النور: 33] فَكَاتَبَهُ
وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
إِنَّ بَرِيرَةَ دَخَلَتْ عَلَيْهَا تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَعَلَيْهَا خَمْسَةُ أَوَاقٍ نُجِّمَتْ عَلَيْهَا فِي خَمْسِ سِنِينَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ وَنَفِسَتْ فِيهَا: أَرَأَيْتِ إِنْ عَدَدْتُ لَهُمْ عَدَّةً وَاحِدَةً أَيَبِيعُكِ أَهْلُكِ، فَأُعْتِقَكِ، فَيَكُونَ وَلاَؤُكِ لِي، فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَعَرَضَتْ ذَلِكَ عَلَيْهِمْ، فَقَالُوا: لاَ، إِلَّا أَنْ يَكُونَ لَنَا الوَلاَءُ، قَالَتْ عَائِشَةُ: فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَهُوَ بَاطِلٌ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»
சமீப விமர்சனங்கள்