தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2561

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 முகாத்தபுக்கு இடும் நிபந்தனைகளில் அனுமதிக்கப்பட்டவை பற்றியும் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவன் பற்றியும்…

மேற்கண்ட (விவகாரம் குறித்த) நபிமொழியை இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

 ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது.

பரீரா (ரலி), தனக்கு (தன் எஜமானர்களிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தன் விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், நீ உன் எஜமானர்களிடம் திரும்பிச் சென்று (அவர்களுடைய சம்மதத்தைக் கேள். நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி (உன்னை விடுதலை செய்து) உன் வாரிசுரிமையை நான் பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்பி (ஒப்பி)னால் நானே அதைச் செலுத்தி விடுகிறேன் என்று கூறினேன்.

அவ்வாறே, பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் கேட்க, அவர்கள் சம்மதம் தர மறுத்து, உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் (ஆயிஷா (ரலி) அவர்கள்) இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள்.

இதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு, ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர், மக்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லாததாகும், அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே, (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதியும், கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததும் ஆகும் என்று கூறினார்கள்.
Book : 49

(புகாரி: 2561)

بَابُ مَا يَجُوزُ مِنْ شُرُوطِ المُكَاتَبِ، وَمَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ

فِيهِ عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ

أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ: ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي، فَعَلْتُ، فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لِأَهْلِهَا، فَأَبَوْا، وَقَالُوا: إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ، فَلْتَفْعَلْ وَيَكُونَ وَلاَؤُكِ لَنَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِي، فَأَعْتِقِي فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» قَالَ: ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.