பாடம் : 3 முகாத்தப் உதவி தேடுவதும், மக்களிடம் (தனது விடுதலைக்காகப் பணம்) கேட்பதும்.
ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது.
பரீரா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்து, நான், என் எஜமானர்களிடம் ஒன்பது ஊக்கியாக்களை- (விடுதலைத் தொகையாக) ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஊக்கியா வீதம் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையை ஒப்புக் கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள் என்று கேட்டார். நான், உன் எஜமானர்களுக்கு அந்த ஊக்கியாக்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்து விடுவதை அவர்கள் ஏற்று, உன் வாரிசுரிமை எனக்குச் சேர சம்மதிக்கவும் செய்வார்களாயின் நான் அவ்வாறே செய்கிறேன் என்று கூறினேன்.
எனவே, பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் சென்றார். (அவர்களிடம் நான் சொன்னதைக் கூற) அவர்கள் அவரிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்கள். (பிறகு) பரீரா (ரலி) என்னிடம் வந்து), அவர்களிடம் உங்கள் விருப்பத்தை முன் வைத்தேன். (என்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தாலே தவிர அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது பற்றி) என்னைக் கேட்க, நான் அவர்களுக்கு விபரத்தைச் சொன்னேன். அவளை எடுத்துக் கொண்டு விடுதலை செய்துவிடு. அவர்களிடம் வாரிசுரிமை (உனக்கேயுரியது என்று) நிபந்தனை விதித்து விடு.
ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும், நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே!
அல்லாஹ்வின் தீர்ப்பே, (ஏற்று) பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியும், கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர் இன்னானே! (என் அடிமையை வாங்கி) விடுதலை செய்து விடு. ஆனால், வாரிசுரிமை எனக்கே உரியது என்று கூறுகிறாரோ! (எனினும்) விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.
Book : 49
بَابُ اسْتِعَانَةِ المُكَاتَبِ وَسُؤَالِهِ النَّاسَ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
جَاءَتْ بَرِيرَةُ، فَقَالَتْ: إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي، فَقَالَتْ عَائِشَةُ: إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً وَأُعْتِقَكِ، فَعَلْتُ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي، فَذَهَبَتْ إِلَى أَهْلِهَا فَأَبَوْا ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ: إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا، إِلَّا أَنْ يَكُونَ الوَلاَءُ لَهُمْ، فَسَمِعَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَنِي فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «خُذِيهَا، فَأَعْتِقِيهَا، وَاشْتَرِطِي لَهُمُ الوَلاَءَ، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، قَالَتْ عَائِشَةُ: فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” أَمَّا بَعْدُ، فَمَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، فَأَيُّمَا شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَهُوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، فَقَضَاءُ اللَّهِ أَحَقُّ وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، مَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَقُولُ أَحَدُهُمْ: أَعْتِقْ يَا فُلاَنُ وَلِيَ الوَلاَءُ، إِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ
சமீப விமர்சனங்கள்