தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2578

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவர்கள் (அவருடைய எஜமானர்கள்) அவருடைய வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும். (என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே அவரை விற்போம்) என்று நிபந்தனையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு.ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.

பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தர்மமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும். என்று கூறினார்கள்.

மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரை பிரிந்து விடுவது அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது என்னும் இரு விஷயங்களில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திரமானவரா? அடிமையா? என்று கேட்டார்கள். நான் அப்துர் ரஹ்மானிடம் பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். அவர் சுதந்திரமானவரா, அடிமையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார் என்பதாக மற்றோர் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்கள்.
Book :50

(புகாரி: 2578)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، قَالَ: سَمِعْتُهُ مِنْهُ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، وَأَنَّهُمُ اشْتَرَطُوا وَلاَءَهَا، فَذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، وَأُهْدِيَ لَهَا لَحْمٌ، فَقِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ» وَخُيِّرَتْ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: زَوْجُهَا حُرٌّ أَوْ عَبْدٌ؟ قَالَ شُعْبَةُ: سَأَلْتُ عَبْدَ الرَّحْمَنِ عَنْ زَوْجِهَا، قَالَ: «لاَ أَدْرِي أَحُرٌّ أَمْ عَبْدٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.