பாடம் : 8 ஒருவர் தன் தோழருக்கு அன்பளிப்பு வழங்குவதும், அத்தோழர் தன் மனைவிமார்களில் குறிப்பிட்ட ஒருவருடைய வீட்டில் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து அன்பளிப்பு வழங்குவதும், வேறு மனைவிமார்களின் வீட்டில் இருக்கும் போது அன்பளிப்பு வழங்காமலிருப்பதும்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்து வந்தார்கள். உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்„ என் தோழிகள் (நபி (ஸல்) அவர்களின் பிற மனைவிமார்கள் எனது வீட்டில்) ஒன்று கூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக்கையைச்)- சொன்னேன். அவர்கள் அதை (கண்டு கொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.
Book : 50
بَابُ مَنْ أَهْدَى إِلَى صَاحِبِهِ وَتَحَرَّى بَعْضَ نِسَائِهِ دُونَ بَعْضٍ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمِي» وَقَالَتْ أُمُّ سَلَمَةَ: «إِنَّ صَوَاحِبِي اجْتَمَعْنَ، فَذَكَرَتْ لَهُ، فَأَعْرَضَ عَنْهَا»
சமீப விமர்சனங்கள்