தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2588

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

கணவன் தன் மனைவிக்கும், மனைவி தன் கணவனுக்கும் அன்பளிப்புச் செய்தல்.

இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்வது செல்லும் என்று கூறினார்கள்.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்புச் செய்தால் தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, அவர்களுடைய கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள விரும்பி, தம் மற்ற மனைவிமார்களிடம் (அவர்களிடம் தாம் தங்கவேண்டிய நாட்களிலும் ஆயிஷா (ரலி) அவர்களிடமே தங்கிக் கொள்வதற்கு) அனுமதி கேட்டார்கள். மேலும், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தன் மனைவியிடம், உனது மஹ்ரில் சிறிதளவை அல்லது உன் மஹ்ர் முழுவதையும் எனக்கு அன்பளிப்புச் செய்து விடு என்று கூறி (அதைப் பெற்றுக் கொண்டு) சிறிது காலத்திற்குள் அவளை விவாகரத்துச் செய்து விட, (விவாகரத்துச் செய்யப்பட்ட) அப்பெண், அவரிடம் தான் கொடுத்த மஹ்ரைத் திரும்பக் கேட்பாளாயின், அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால் அவர் அவளிடம் அதைத் திருப்பித் தந்து விடுவார். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்தால், அதை அவளிடமிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய சம்மதத்துடன் பெற்றிருந்தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தானே வைத்துக் கொள்ளலாம் என்று இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், பெண்களுக்கு அவர்களுடைய மஹ்ரை மனப்பூர்வமாகக் கொடுத்து விடுங்கள். ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் உங்களுக்கு மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்தால் அதைத் தயக்கமின்றி நீங்கள் உண்ணலாம். (அல்குர்ஆன் 4:4)

 ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவிமார்களிடம் கேட்டார்கள், அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் அவர்கள் தாம் என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 50

(புகாரி: 2588)

بَابُ هِبَةِ الرَّجُلِ لِامْرَأَتِهِ وَالمَرْأَةِ لِزَوْجِهَا

قَالَ إِبْرَاهِيمُ: «جَائِزَةٌ» وَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: «لاَ يَرْجِعَانِ» وَاسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِ عَائِشَةَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ» وَقَالَ الزُّهْرِيُّ: فِيمَنْ قَالَ لِامْرَأَتِهِ: هَبِي لِي بَعْضَ صَدَاقِكِ أَوْ كُلَّهُ، ثُمَّ لَمْ يَمْكُثْ إِلَّا يَسِيرًا حَتَّى طَلَّقَهَا فَرَجَعَتْ فِيهِ، قَالَ: «يَرُدُّ إِلَيْهَا إِنْ كَانَ خَلَبَهَا، وَإِنْ كَانَتْ أَعْطَتْهُ عَنْ طِيبِ نَفْسٍ لَيْسَ فِي شَيْءٍ مِنْ أَمْرِهِ خَدِيعَةٌ، جَازَ» قَالَ اللَّهُ تَعَالَى: {فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ} [النساء: 4]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا

«لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ العَبَّاسِ وَبَيْنَ رَجُلٍ آخَرَ»، فَقَالَ عُبَيْدُ اللَّهِ: فَذَكَرْتُ لِابْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي: وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ؟ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ


Bukhari-Tamil-2588.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2588.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.