பாடம் : 18 இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர்.
ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும் (43:72) என்று கூறுகின்றான்.
உம் இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில்
(அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம் என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில் பலர் கூறியிருக்கிறார்கள்.
(சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ் இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான்.
‘செயல்களில் சிறந்தது எது?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என வினவப்பட்டதற்கு, ‘இறைவழியில் போரிடுதல்’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அங்கீகரிக்கப்படும் ஹஜ்’ என்றார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 2
بَابُ مَنْ قَالَ إِنَّ الإِيمَانَ هُوَ العَمَلُ
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَتِلْكَ الجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الزخرف: 72] وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ العِلْمِ فِي قَوْلِهِ تَعَالَى: {فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ} [الحجر: 93] عَنْ قَوْلِ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَقَالَ: {لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ العَامِلُونَ} [الصافات: 61]
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ
أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ». قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»
சமீப விமர்சனங்கள்