தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2601

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 வரவேண்டிய கடனை அன்பளிப்பாக்கி விடுவது.

இதற்கு அனுமதியுண்டு என்று ஹகம் (ரஹ்) கூறுகிறார்கள்.

ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் தமக்கு ஒரு மனிதர் தரவேண்டிய கடனை அன்பளிப்புச் செய்தார்கள்.

எவர் மீது ஒரு கடமை (அல்லது கடன்) இருக்கின்றதோ, அவர் அதனை நிறைவேற்றி விடட்டும்; அல்லது உரியவரிடம் மன்னிப்பு வாங்கி அதை ஹலால் (தனக்கு அனுமதிக்கப்பட்டதாக) ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை தன் மீது கடன் இருக்கின்ற நிலையில் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட் டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியிருந்த கடனைத் தள்ளுபடி செய்து) என் தந்தையை மன்னிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்கள்.

 ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப்பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள், என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும்படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்பியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை, கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, நான் உன்னிடம் நாளை வருவேன் என்று கூறினார்கள். (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்திற்காக பிரார்த்தித்தார்கள். நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களின் உரிமைகளை நிறைவேற்றினேன்.

எங்களுக்கு அவற்றின் பழங்களில் சிறிதளவு எஞ்சியது. பிறகு, நான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர்கள் (தமது அவையில்) அமர்ந்திருந்த பொழுது வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்களிடம் , உமரே ! (ஜாபிர் சொல்வதை) கேளும் என்றார்கள்,  அதற்கு உமர் (ரலி) தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று கூறினார்கள்.
Book : 50

(புகாரி: 2601)

بَابُ إِذَا وَهَبَ دَيْنًا عَلَى رَجُلٍ

قَالَ شُعْبَةُ عَنِ الحَكَمِ: «هُوَ جَائِزٌ»

وَوَهَبَ الحَسَنُ بْنُ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلاَمُ لِرَجُلٍ دَيْنَهُ

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ لَهُ عَلَيْهِ حَقٌّ، فَلْيُعْطِهِ أَوْ لِيَتَحَلَّلْهُ مِنْهُ»

فَقَالَ جَابِرٌ: قُتِلَ أَبِي وَعَلَيْهِ دَيْنٌ، «فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُرَمَاءَهُ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي»

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ

أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، فَاشْتَدَّ الغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمْتُهُ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَلَكِنْ قَالَ: «سَأَغْدُو عَلَيْكَ إِنْ شَاءَ اللَّهُ»،

فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهِ بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ حُقُوقَهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ ثَمَرِهَا بَقِيَّةٌ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ، فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «اسْمَعْ، وَهُوَ جَالِسٌ، يَا عُمَرُ»، فَقَالَ: أَلَّا يَكُونُ؟ قَدْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ وَاللَّهِ، إِنَّكَ لَرَسُولُ اللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.