பாடம் : 24 பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்.
2607. & 2608. மர்வான் பின் ஹகம் (ரலி) மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) ஆகியோர் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களாக வந்தபோது அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
(உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள் அல்லது போர்க் கைதிகள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்டபோது, நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடயே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்தார்கள். பிறகு, (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் தவ்பா செய்தவர்களாக (மனம் திருந்தியவர்களாக) நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளை திரும்பக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன்.
உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்) எவர் நமக்கு அல்லாஹ் (இனி கிடைக்கவிருக்கும் வெற்றிகளில்) முதன் முதலாகக் கொடுக்கவிருக்கும் செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே செய்யட்டும், (அதுவரை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும்) என்று கூறினார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளை திருப்பித்) தந்து விடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் உங்களில் எவர் சம்மதிக்கிறார், எவர் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாதாகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) எங்களிடம் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) திரும்பி வந்து, நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
Book : 50
بَابُ إِذَا وَهَبَ جَمَاعَةٌ لِقَوْمٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ مَرْوَانَ بْنَ الحَكَمِ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ، فَقَالَ لَهُمْ: ” مَعِي مَنْ تَرَوْنَ وَأَحَبُّ الحَدِيثِ إِلَيَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ: إِمَّا السَّبْيَ وَإِمَّا المَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ “، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلَّا إِحْدَى الطَّائِفَتَيْنِ، قَالُوا: فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا، فَقَامَ فِي المُسْلِمِينَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ جَاءُونَا تَائِبِينَ وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ، فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ»، فَقَالَ النَّاسُ: طَيَّبْنَا يَا رَسُولَ اللَّهِ لَهُمْ، فَقَالَ لَهُمْ: «إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِيهِ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ»، فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا، وَأَذِنُوا وَهَذَا الَّذِي بَلَغَنَا مِنْ سَبْيِ هَوَازِنَ، هَذَا آخِرُ قَوْلِ الزُّهْرِيِّ «يَعْنِي فَهَذَا الَّذِي بَلَغَنَا»
சமீப விமர்சனங்கள்