தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2635

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 மக்களின் வழக்கிலுள்ளபடி உனக்கு இந்த அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்து விடுகிறேன் என்று ஒருவர் கூறினால் அது செல்லும்.

இப்படிச் சொல்வது இரவலாகக் கொடுப்பதையே குறிக்கும் (அன்பளிப்பு ஆகாது) என்று சிலர் கூறுகின்றனர். மேலும், ஒருவர், நான் இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன் என்று கூறினால் அது(வும்) அன்பளிப்பாகும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் மனைவி) ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். எகிப்து நாட்டு மன்னரின் ஆட்கள், ஸாராவுக்கு ஹாஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். ஸாரா திரும்பி வந்து, ‘அல்லாஹ், நிராகரிப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?’ என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘எகிப்து நாட்டு மன்னன், ஸாராவுக்கு ஹாஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
Book : 51

(புகாரி: 2635)

بَابُ إِذَا قَالَ: أَخْدَمْتُكَ هَذِهِ الجَارِيَةَ، عَلَى مَا يَتَعَارَفُ النَّاسُ، فَهُوَ جَائِزٌ

وَقَالَ بَعْضُ النَّاسِ: «هَذِهِ عَارِيَّةٌ» وَإِنْ قَالَ: كَسَوْتُكَ هَذَا الثَّوْبَ، فَهُوَ هِبَةٌ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ، فَأَعْطَوْهَا آجَرَ، فَرَجَعَتْ، فَقَالَتْ: أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً ،

وَقَالَ ابْنُ سِيرِينَ: عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَخْدَمَهَا هَاجَرَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.