பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்கு முன் நடந்த மரணம் ஆகிய வற்றை நிரூபிக்க சாட்சியம் அளித்தல்.
நபி (ஸல்) அவர்கள், தனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள் என்று கூறியதும், (செவிலித் தாயிடம்) பால் குடித்ததை சாட்சிகள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்'(ரலி) அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘நன் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க் கொள்கிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?’ என்று கேட்டேன்.
அதற்கவர், ‘என் சகோதரரின் மனைவி, என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்’ என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு’ என்று கூறினார்கள்.
Book : 52
بَابُ الشَّهَادَةِ عَلَى الأَنْسَابِ، وَالرَّضَاعِ المُسْتَفِيضِ، وَالمَوْتِ القَدِيمِ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ» وَالتَّثَبُّتِ فِيهِ
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا الحَكَمُ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ، فَلَمْ آذَنْ لَهُ، فَقَالَ: أَتَحْتَجِبِينَ مِنِّي وَأَنَا عَمُّكِ، فَقُلْتُ: وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي بِلَبَنِ أَخِي، فَقَالَتْ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَدَقَ أَفْلَحُ ائْذَنِي لَهُ»
சமீப விமர்சனங்கள்