பாடம் : 19 நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம், உனக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சொல்லி சத்தியம் செய்கிறவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (வந்து), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று என்னைக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்’ என்று கூறினார்கள்.
நான், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்துச் சென்று விடுவானே’ என்று கூறினேன். அப்போதுதான்,
‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது’ என்னும் திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
Book : 52
بَابُ سُؤَالِ الحَاكِمِ المُدَّعِيَ: هَلْ لَكَ بَيِّنَةٌ؟ قَبْلَ اليَمِينِ
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»،
قَالَ: فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ: فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ اليَهُودِ أَرْضٌ، فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ بَيِّنَةٌ»، قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: فَقَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي،
قَالَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ
சமீப விமர்சனங்கள்