தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2669 & 2670

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2669 & 2670. அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

‘ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை (மறுமையில் அவர் சந்திப்பார்)’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது’ என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:

பிறகு அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?’ என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதைத் தெரிவித்தோம். அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் அருளப்பட்டது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், ‘உன்னுடைய இரண்டு சாட்சிகள் அல்லது அவரின் சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன’) என்று கூறினார்கள்.

நான், ‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கிறவன், தன் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பான்’ என்று கூறினார்கள்.

‘அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் இச்சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான்’ என்று கூறிவிட்டு அந்த (திருக்குர்ஆன் 03:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
Book :52

(புகாரி: 2669 & 2670)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ

مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ، ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ} [آل عمران: 77] إِلَى {عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]، ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا، فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فَحَدَّثْنَاهُ بِمَا قَالَ: فَقَالَ صَدَقَ، لَفِيَّ أُنْزِلَتْ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي شَيْءٍ، فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ» فَقُلْتُ لَهُ: إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلَا يُبَالِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا، وَهُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.