தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2673

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.

(ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் மிம்பரின் மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், நான் என்னிடத்தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன் என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்து விட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள், உனது இரு சாட்சிகளும், அவரது சத்தியமும் என்று தான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (இன்ன இடத்தில் செய்யும் சத்தியம் என்று) கூறவில்லை.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 52

(புகாரி: 2673)

بَابُ  يَحْلِفُ المُدَّعَى عَلَيْهِ حَيْثُمَا وَجَبَتْ عَلَيْهِ اليَمِينُ، وَلاَ يُصْرَفُ مِنْ مَوْضِعٍ إِلَى غَيْرِهِ

قَضَى مَرْوَانُ بِاليَمِينِ عَلَى زَيْدِ بْنِ ثَابِتٍ عَلَى المِنْبَرِ، فَقَالَ: أَحْلِفُ لَهُ مَكَانِي فَجَعَلَ زَيْدٌ يَحْلِفُ وَأَبَى أَنْ يَحْلِفَ عَلَى المِنْبَرِ، فَجَعَلَ مَرْوَانُ يَعْجَبُ مِنْهُ

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ» فَلَمْ يَخُصَّ مَكَانًا دُونَ مَكَانٍ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ لِيَقْتَطِعَ بِهَا مَالًا، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.